பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ட்வீட்.
கடந்த சில மாதங்களாக அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், சொத்துக் குவிப்பு புகார் தொடர்பாக தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த சோதனைக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், இந்த சோதனையின் போது, தனியார் டிவி சேனலை சேர்ந்த கேமராமேன் ஒருவர் போலீசாரால், தாக்கப்படும் வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், விடியா அரசின் பழிவாங்கும் நடவடிக்கையில், முன்னாள் அமைச்சர் திரு. எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது ஏவப்பட்ட சோதனையின் போது நமது அம்மா நாளிதழ் தாக்கப்பட்டது, இன்று முன்னாள் அமைச்சர் திரு.தங்கமணி அவர்கள் மீது நடத்தப்படும் சோதனையின் பொழுது, தனியார் டிவி சேனலை சேர்ந்த கேமராமேன், திரு.ஆண்ட்ரூஸ் மீது காவல்துறையினர் கடுமையான தாக்குதல் நடத்துகின்றனர், இதுதான் விடியா அரசின் பத்திரிக்கை சுதந்திரமா? தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதை கடுமையாக கண்டிக்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
சென்னை : நேற்று முதல் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயில் காலம் ஆரம்பமாகியது என வானிலை ஆய்வு…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதியன்று காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததை…
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…