அதிமுக – பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அறிவித்திருப்பது வருத்தமளிக்கிறது என்று வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசியல் களம் அனல் பறக்க தொடங்கியிருக்கிறது. பிரதான கட்சியான அதிமுக – திமுக தங்களது கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரப்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் திமுக கூட்டணியில் உள்ள பெரும்பாலான கட்சிகளுடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. மறுபக்கம் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக கட்சிகளை தவிர்த்து மற்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.
அந்தவகையில் அதிமுக – தேமுதிக இடையே நான்கு கட்டம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுலபமான முடிவு எட்டப்படவில்லை. ஆனாலும், விரைவில் இதற்கான முடிவு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட, சூழலில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுவதாக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் அறிவித்திருந்தது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய பாஜக தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசன், தேசிய ஜனநாயக கூட்டணியில் நீண்ட நாட்கள் இருந்தார்கள். இன்று கூட்டணியில் இருந்து வெளியேறியது வருத்தமளிக்கிறது. ஆனாலும், தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய நேரம் உள்ளது, விலக்கிக்கொள்வதற்கும் நேரம் இருக்கிறது.
ஆகையால், தேமுதிக மறுபரிசீலனை செய்ய வேண்டும், அதேபோல் அதிமுகவும் அவர்களை இணைப்பதற்கு எதாவது வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி இருந்தால் நல்ல இருக்கும் என்று நினைகிறேன் என கூறியுள்ளார். இதனால் மீண்டும் அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்று நம்பிக்கை இருப்பதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை : 2026 தேர்தல் சுற்றுப் பயணத்திற்கான இலச்சினை மற்றும் பாடலை சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 2026…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு ஜூலை…
கீவ் : ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே போர் மேலும் தீவிரமடையும் வாய்ப்பு உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் அதிகரித்து…
பர்மிங்காம் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா அணி…
டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…