VCK Leader Thirumavalavan - PM Modi - Union minister Amit shah [File Image]
இன்று புதுச்சேரியில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்பியுமான திருமாவளவன் ஆளும் பாஜக பற்றி பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த முக்கிய வியூகங்கள் குறித்து மும்பை கலந்தாய்வு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. எதிர்க்கட்சிகள் ஒன்றினையும் என பிரதமர் மோடி நினைக்கவில்லை.
எதிர்கட்சிகளிடையே நல்லிணக்க புரிதல் உருவாகியுள்ளது. இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும். சனாதன சக்திகள் 2024 தேர்தலில் அப்புறப்படுத்தப்படும். பாஜக இந்துக்கு எதிரான கட்சி. அதனை இந்து மக்கள் உணர ஆரம்பித்து உள்ளனர். வரும் தேர்தலில் பாஜகவை வீழ்த்தப்போவது பெரும்பான்மை இந்து தான் என்பதை நடந்துமுடிந்த கர்நாடக தேர்தல் வெளிகாட்டிவிட்டது. இந்தியா கூட்டணி சிதற வேண்டும் என பாஜகவினர் கனவு காண்கிறார்கள். அது பலிக்காது.
நாளை (ஆகஸ்ட் 18) சென்னையில், விசிக மாணவரணி பிரிவு சார்பில் நாங்குநேரியில் பள்ளி மாணவன் சின்னத்துரை அவனது சகோதரி ஆகியோர் உடன் பயிலும் மாணவர்களால் வெட்டப்பட்ட சம்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
அதே போல நெல்லையில் வரும் 21ஆம் தேதி விசிக தலைமையில் நாங்குநேரி சமபவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது. அங்கு தோழமை கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடையே ஆர்எஸ்எஸ் மதவெறியை திட்டமிட்டு பரப்புகிறார்கள் .
கர்நாடகாவில் பாஜக ஆட்சியின் போது ஹிஜாப் சர்ச்சை எழுந்த போது, காவி துணியை பள்ளி வாசலில் கொண்டு சேர்த்தவர்கள் பாஜகவினர். சாதிய அடையாளங்களை மாணவர்கள் மத்தியில் கைகளில் கயிறு கட்டுவது, வாகனங்களில் சாதிய அடையாளங்களை கொண்டுவருவது போன்ற செயல்களை செய்து மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடை விதைக்கிறார்கள்.
நீதிபதி சந்துரு தலைமையிலான விசாரணை குழு நாங்குநேரி சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு உரிய ஆலோசனை வழங்க வேண்டும்.
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநரை கொண்டு ஆளும் அரசுக்கு பாஜக இடையூறு கொடுத்து வருகிறது.
ஆளுநர் விவகாரம், தமிழகத்தில் மட்டுமல்ல, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், டெல்லி, ஆந்திரா, தெலுங்கானா என பல்வேறு மாநிலங்களில் இதே நிலை தான். இது ஜனநாயக்த்ரு எதிரான போக்கு இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஆளுநர்கள் அரசியலமைப்பு சட்டத்தின் படி நடந்து கொள்ள வேண்டும்.
ஆளுநர் மாளிகையில் நடந்த கலந்தாய்வில் நீட விலக்கு மசோதா குறித்த கேள்விக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுத்த பதில் அவருடைய அகந்தையை வெளிப்படுத்துகிறது. ஆளுனர் ரவி ஆஎஸ்எஸ் தொண்டராக தன்னை வெளிப்படுத்திவருகிறார்.
20ஆம் தேதி நீட் தேர்வை எதிர்த்து திமுக நடத்தும் போராட்டத்திற்கு எங்கள் ஆதரவு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம். பிரதமர் மோடி மற்றும் பாஜகவினர் எந்த மாநிலத்திற்கு சென்று பேசினாலும், வீடியோ கான்பிரன்ஸ் வாயிலாக பேசினாலும் திமுகவை சுட்டிக்காட்டி விமர்சிப்பதை யுக்தியாக கையாளுகிறார்கள்.
அதிமுக கட்சியானது பாஜக கூட்டணியில் இருப்பதால் பாஜகவின் அடாவடிகள் பற்றி கூறமுடியாமல் இருக்கிறது. வரும் தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என இன்று புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் விசிக தலைவர் திருமாவளவன் பேசினார்.
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவருமான மகேந்திர சிங் தோனி,…
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…