#Breaking:”பவியேற்ற முதல் நாளிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின்,5 திட்டங்கள் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”- ப.சிதம்பரம்..!

Published by
Edison

முதல்வர் மு.க.ஸ்டாலின்,தான் பவியேற்ற முதல் நாளிலேயே 5 திட்டங்கள் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றத்தை தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று மறந்த முன்னாள் முதல்வர் கலைஞர் படத்திற்கு மலர்த்தூவி மரியாதையை செலுத்திய பின் தயார் தயாளு அம்மாளிடம் ஆசிபெற்றார்.

மேலும்,முதல்வர் மு.க. ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று, மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.அதன்பின்னர்,தலைமைச் செயலகம் வந்து முதல்வர் இருக்கையில் அமர்ந்த மு.க. ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டர்.அதில்,

      • முதல் கையெழுத்து கொரோனா நிவாரண நிதியாக ரூ.4000 வழங்கும் கோப்பில் கையெழுத்திட்டார்.கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக ரூ.2000 ரூபாய் இம்மாதம் வழங்கப்படும்.
      • இரண்டாவதாக,ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.இது வருகின்ற 16-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
      • 3-வது கோப்பில் அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
      • 4-வது கோப்பில் கொரனோ பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தால் அதன் கட்டணம் முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் கீழ் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
      • மேலும்,5-வது கோப்பில் மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாண ‘உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,மத்திய முன்னாள் நிதி மற்றும் உள்துறை அமைச்சரும்,தற்போதைய காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யுமான ப.சிதம்பரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில்,”இன்று பதவியேற்றுக்கொண்ட முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் மற்ற அமைச்சர்களுக்கும் என்னுடைய வாழ்த்தையும்,வரவேற்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்”,என்று கூறினார்.

மேலும்,”பதவியேற்ற முதல் நாளிலேயே 5 சிறப்பான திட்டங்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. மேலும்,தமிழகத்தின் நிதி நிலைமையை சீரமைக்கும் நடவடிக்கைகளை முதல்வர் உடனடியாக தொடங்க வேண்டும்”,என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Published by
Edison

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

18 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

20 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

23 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago