Thoothukudi Thermal powerplant [File Image]
அனல் மின் நிலையங்களுக்கு நிலக்கரி கையாளும் பொறுப்பை மேற்கொள்ளும் ராதா இன்ஜினீரியங் ஒர்க்ஸ் நிறுவனத்தின் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையானது தூத்துக்குடி, வடசென்னதிருவள்ளூர் துறைமுகம்), மேட்டூர் ஆகிய இடங்களில் அந்நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடைபெறுகிறது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், துறைமுகத்தில் இருந்து நிலக்கரியை இறக்குமதி செய்து அதனை அனல் மின் நிலையத்திற்கு கொண்டு சேர்க்கும் ஒப்பந்தத்தில் ராதா இன்ஜினீரிங் ஒர்க்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வந்துள்ளளது. அதன்படி, சுமார் 250 கோடி செலவில் கன்வேயர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த டெண்டர் விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகவும், இது தொடர்பாக அனல் மின் நிலைய அதிகாரிகளுக்கு மதுவிருந்து அளிக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணைகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. மேலும், இந்த மது விருந்தில் சுமார் 70 பேர் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், தூத்துக்குடி மட்டுமல்லாது ராதா இன்ஜினீரிங் ஒர்க்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள வடசென்னதிருவள்ளூர் துறைமுகம்), மேட்டூர் ஆகிய இடங்களில் உள்ள அலுவலக பகுதிகளிலும் இந்த டெண்டர் முறைகேடு தொடர்பாக சோதனை நடைபெற்று வருகிறது.
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…
ஜெய்ப்பூர் : ஆபரேஷன் சிந்தூர்க்கு ஆதரவு அளிக்கும் விதமாக, ஜெய்ப்பூரில் உள்ள இனிப்பகம் ஒன்று மைசூர் பாக், இனிப்புகளின் பெயர்களை…
சென்னை : நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவியின் விவாகரத்து செய்தி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…