Minister Senthil Balaji - Former Minister Jayakumar [ File Image]
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் திமுக அரசு பற்றியும், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வது பற்றியும் விமர்சனம் செய்து தனது கருத்தை முன்வைத்தார்.
அதாவது முதலமைச்சர் தலைமையில் ஒரு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது என்றால், அதில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் அடங்கிய கோப்புகள் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்களுக்கு வழங்கப்படும். அதில் துறை ரீதியிலான அமைச்சர்கள் கையெழுத்திட்டு அனுப்பி வைப்பார் இதுதான் அமைச்சரவை விதிமுறை.
இதனை குறிப்பிட்டு ஜெயக்குமார், தமிழக அமைச்சரவையில் இன்னும் அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்கிறார். அவர் தற்போது சிறையில் இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு முடிவு எடுக்கப்பட்டால் கையெழுத்திட அந்த ரகசிய கோப்புகள் சிறைக்கு அனுப்பி வைக்கப்படும். அப்படி அனுப்பி வைக்கப்பட்டால் அதனை சிறைத்துறை விதிப்படி அங்குள்ள அதிகாரிகள் பிரித்து படித்து பார்த்து தான் கைதிகளுக்கு கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.
இதனால் அமைச்சராக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியால் விதிமுறைகள் மீறப்படுகிறது என குறிப்பிட்டார். இதற்கு சட்டவிதி 356-இன்படி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என தனது விமர்சனத்தையும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்வைத்தார்.
மேலும், ஊழலை சுட்டிக்காட்ட அதிமுக என்றும் தயங்கியதில்லை என்றும், அண்ணாமலையும் அதனை தான் செய்கிறார். என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…