தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் அடுத்துள்ள முத்தனம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் தனியாா் நர்ஸிங் கல்லூரியின் தாளாளா் ஜோதிமுருகன் மீது மாணவிகள் பாலியல் புகாா் அளித்தனர். புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தாளாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சாலை மறியல் ஈடுபட்டனா். போலீசார் பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ஜோதிமுருகனை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும் என மாணவர்கள் தெரிவித்தனர். 2 நாள்கள் மாணவா்கள் நடத்திய போராட்டத்துக்குப் பின் அந்த கல்லூரிக்கு மாவட்ட நிா்வாகம் சீல் வைத்தது. விடுதியில் தங்கியிருந்த மாணவா்களும் சொந்த ஊா்களுக்கு சென்றனா்.
இதனைத் தொடர்ந்து தலைமறைவான ஜோதிமுருகனை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் ஜோதிமுருகன், திருவண்ணாமலை அருகே போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். பின்னர், பாலியல் வழக்கில் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனுக்கு 3 நாட்கள் போலீஸ் காவலை திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் வழங்கியது.
இந்நிலையில், தனியார் நர்ஸிங் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தாளாளர் ஜோதிமுருகனுக்கு ஜாமீன் வழங்கி திண்டுக்கல் மகிளா நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. வெளிநாடுகளுக்கு தப்பி செல்லாமல் இருக்க ஜோதிமுருகனின் பாஸ்போர்ட் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. மேலும், ஜோதிமுருகன் நாள்தோறும் வட மதுரை காவல்நிலையத்தில் கையெழுத்திடவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
கோயம்புத்தூர்: அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மேட்டுப்பாளையத்தில் ஜூலை…
ஹைதராபாத் : துல்கர் சல்மான் நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘லக்கி பாஸ்கர்’ திரைப்படத்தின்…
காஞ்சிபுரம் : மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லக்கோட்டை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி…
குவாங்டாங் : சீனாவின் குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த 82 வயது முதியவர் லாங், தான் இறந்த பிறகு தனது அன்பு…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி அந்த செய்தி தீயை போல மிகவும்…