ஜூலை 2 பொறியியல் கலந்தாய்வு தொடக்கம்.. செப்.3ம் தேதி முதலாமாண்டு வகுப்புகள் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

minister ponmudi

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி தொடங்கும் என அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.

இந்த ஆண்டு ஒரு மாதம் முன்பாகவே பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆம் தேதி தொடங்குகிறது என்றும் பொது பிரிவினருக்கு கலந்தாய்வு ஜூலை 7-ஆம் தேதி தொடங்குகிறது எனவும் தெரிவித்தார்.

ஏற்கனவே, ஆக.2ம் தேதி பொறியியல் கலந்தாய்வு என அறிவித்திருந்த நிலையில், ஒரு மாதம் முன்கூட்டியே நடைபெறும் என அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து பேசிய அமைச்சர், செப்டம்பர் 3-ஆம் தேதி பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள் தொடங்கும். மேலும், பாலிடெக்னிக் தொழில்நுட்ப படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்றார். அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பத்திற்கான அவகாசம் 3 நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு கலை, கல்லூரிகளில் சேர சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் விண்ணப்பிக்கலாம். அரசு கலை கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்கள் உள்ளன. அதன்படி, http://www.tngasa.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்