மாணவர்களே....! கல்லூரிகளில் சேர்வதற்கு மேலும் 3 நாட்கள் விண்ணப்பிக்கலாம்..!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Arts and Science College

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க இன்றுடன் அவகாசம் நிறைவடையும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான அவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார்.

இதுவரை விண்ணப்பிக்காதவர்கள்tngasa.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தில், இதுவரை அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்காக 2.37லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மே 8 முதல் தமிழகத்தில் 633 தனியார் கல்லூரிகள், 163 அரசு கலை கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகம் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.