Kalaignar Karunanidhi [File Image]
இன்று (ஆகஸ்ட் 7) முன்னாள் தமிழக முதல்வரும், திமுக கட்சியின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதி மறைந்த தினம். கலைஞரின் நினைவு தினத்தை முன்னிட்டு மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடம் மற்றும் திருவாரூரில் புதியதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் ஆகியவை மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. காலை முதலே பலரும் வருகை புரிந்து வருகின்றனர். இன்று திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக கட்சியினர் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடம் நோக்கி பேரணி நடைபெற உள்ளது.
இதுகுறித்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இன்று அமைதி பேரணி நடத்த உள்ளோம். உங்களை காண காலையில் அணிவகுத்து வருகிறோம். உங்களுக்கு சொல்ல ஒரு நல்ல செய்தி கொண்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உங்கள் கனவுகளை எல்லாம் நிறைவேற்றி வருகிறோம் என்பதுதான் அந்த நல்ல செய்தி. நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை தான் நான் அமர்ந்து செய்து கொண்டிருக்கிறேன். 2024 தேர்தல் எங்களை எதிர்நோக்கி வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாய் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் தேர்தல் அல்ல இது. என அந்த அறிக்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…