Tamilnadu CM MK Stalin [File Image]
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைதொகையாக வழங்கப்படும் எனும் திட்டமாகும். இந்த திட்டமானது எப்போது அமல்படுத்தப்படும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முன்னாள் முதல்வர் மறைந்த அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த திட்டம் துவங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து விட்டது.
இதற்காக சரியான தகுதியான குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுக்கும் பணி மும்முறமாக நடைபெற்று வருகிறது . இதற்கான விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் இறுதியில் கொடுக்கப்பட்டு ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட விண்ணப்பங்களில் மூலம் தகுதியான நபர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது சுமார் ஒரு கோடி பேர் இந்த திட்டத்தின் கீழ் பயன்பட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி காஞ்சிபுரத்தில் துவங்கி வைக்க உள்ளார். இந்நிலையில் நாளை இந்த திட்டம் குறித்தும் அதன் செயல்பாடுகள் குறித்தும் முக்கிய ஆலோசனையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஈடுபட உள்ளார்.
நாளை தலைமைச் செயலகத்தில் தமிழக உள்ள மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமைத் தொகைக்கான செயல்பாடுகள் அதனை செயல்படுத்தும் வழிமுறைகள் பற்றி ஆலோசிக்கப்பட உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கிய அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, சிறப்பு திட்ட செயலாளர் அகமது ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…