நாளை முதல் இரண்டாம் கட்டமாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 3 நாட்களில் 6 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார்.
2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போது அரசியல் கட்சிகள் தங்களுக்கான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. இதனிடையே , ரஜினியும் ஜனவரி மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சட்டமன்ற தேர்தல் குறித்த பிரச்சாரத்தில் கடந்த 13-ஆம் தேதி முதல் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பிரச்சாரம் மேற்கொண்டார். முதல் கட்டமாக சீரமைப்போம் தமிழகத்தை எனும் பெயரில் தூத்துக்குடி கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கமல்ஹாசன் மேற்கொண்டார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரை திட்டம் வெளியாகியுள்ளது.3 நாட்களில் 6 மாவட்டங்களில் பரப்புரை மேற்கொள்ள இருக்கிறார். அதாவது, டிசம்பர் 20,21,22 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம்,விழுப்புரம் ,திருவள்ளூர் ,செங்கல்பட்டு ,திருவண்ணாமலை,கடலூர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் கமல்ஹாசன். அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கலந்துகொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…