60 வயதை கடந்த 85 லட்சம் பேரை வாக்குச்சாவடிக்கு அழைத்துவர வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது.இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக ஏற்கனவே பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளன.அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சீரமைப்போம் தமிழகத்தை என்கின்ற பெயரில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் இன்று சேலத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேசுகையில்,பெண்கள் ,இளைஞர்கள் நினைத்தால் அரசியலை மாற்றலாம்.பெண்களின் கூட்டம் அதிகம் கூடுவது மக்கள் நீதி மய்யத்திற்கு பெருமை.இவ்வளவு பெரிய எழுச்சியை ஏற்படுத்தி கொடுத்த ஊழல்வாதிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இளைஞர்கள் ஒட்டு அரசியலை கையில் எடுக்க வேண்டும். தமிழகத்தை பொருத்தவரை 85 லட்சம் பேர் 60 வயதை கடந்துள்ளனர்.அந்த 85 லட்சம் பெரும் மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.அவர்களை வாக்குச்சாவடிக்கு அழைத்துவர வேண்டும் என்று கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…