நாளை பாஜகவில் இணைகிறார் குஷ்பூ..?

சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் எதிர்த்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான குஷ்பூ ஆதரவு தெரிவித்தார். இதனால், இவர் பா.ஜ.கவில் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.
பின்னர், உத்தரப் பிரதேசத்தில் இளம்பெண் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, நான் பா.ஜ.கவில் சேர்வதாக இருந்தால், ஏன் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்..? என கூறினார்.
இந்நிலையில், நாளை பாஜக தலைவர் ஜே.பி நாட்டா முன்னிலையில் குஷ்பூ பா.ஜ.கவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கேட்ட கேள்விற்கு பதிலளிக்காமல் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த 2016-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த குஷ்பூவுக்கு, தற்போது வரை சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025