[file image]
பரங்கிமலையை சேர்ந்த சதிஷ் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
சென்னையில் ரயில் முன் தள்ளிவிட்டு இளம்பெண்ணை கொன்றவர் மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம். கடந்தாண்டு சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் காதல் விவகாரத்தில் கல்லூரி மாணவி சத்யா ரயில் முன்பு தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியிருந்தது.
காதல் விவகாரத்தில் சத்யாவை ரயில் முன் தள்ளி கொலை செய்த சதிஷ் கடந்த அக்.13ல் கைது செய்யப்பட்டார். பின்னர் சிபிசிஐ பரிந்துரையின் அடிப்படையில் சதிஷ் கடந்த நவம்பர் 4ம் தேதி குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதன்பின், தன்னை சட்டவிரோதமாகவும், அடிப்படை உரிமையை மீறியும் குண்டர் சட்டத்தில் கைது செய்திருப்பதாக சதீஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், ரயில் முன் இளம்பெண்ணை தள்ளிவிட்ட குற்றத்தில் ஈடுபட்ட சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, மாணவி சத்யா கொலையை அடுத்து அவரது தந்தையும் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டார். காவல்துறையில் பணியாற்றும் தாயும் சமீபத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…
சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…