கோவை மாவட்டத்தில் உள்ள கல்லுக்குழி எனும் பகுதியில் வசித்து வந்துள்ளார் சக்திவேல். இவர் சாஃப்ட்வேர் என்ஜினீரியாக பணியாற்றி வந்துள்ளார். இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவர் சில நாட்களாக கால் செய்யவில்லை என கூறி, இவரது தங்கை கணவர் நெல்லையில் இருந்து கோவை வந்துள்ளார்.
வந்து வீட்டை திறந்து பார்த்துள்ளார். பார்த்தவருக்கு பேரதிர்ச்சி. காரணம் வீட்டினுள் சக்திவேல் எறிந்த நிலையில் சடலமாக இறந்து கிடந்துள்ளார். இதனை அடுத்து போலீசில் புகார் அளிக்கப்பட்டு அவர்கள் விசாரணையை தொடங்கினர்.
போலீஸ் விசாரணையில், சக்திவேலின் எதிர்வீட்டில் வசித்து வந்துள்ள ஆனந்தகுமார் என்பவருக்கும் சக்திவேலுக்கும் அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. சம்பவத்தன்று, சக்திவேலின் வீட்டின் முன்பு இருந்த மரம் வெட்டப்பட்டது தொடர்பாக சக்திவேலுக்கும் ஆனந்தகுமாருக்கும் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதில் கோபமடைந்த ஆனந்தகுமார் தனது கூட்டாளிகள் 4 பேருடன் சேர்ந்து சக்திவேலை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சக்திவேல் இறந்துவிட்டார். உடனே சிரட்டை கரி, மண்ணெண்ணெய் கொண்டு சக்திவேல் உடலை சக்த்திவேல் வீட்டிலேயே எரித்துவிட்டார். இந்த அதிர்ச்சி தகவல் தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது.
தற்போது சக்திவேலை கொன்று எரித்த ஆனந்தகுமார் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் போலீசார் விசாரணையில் உள்ளனர்.
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில்…
சென்னை : இன்று தமிழ்நாட்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வு எழுதியதில் 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த மார்ச் 1, 2025 முதல் மார்ச் 22, 2025 வரையில் +2 பொதுத்தேர்வுகள் நடைபெற்றன.…
மதுரை : இன்று (மே 8) மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்வு காலை…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நேற்று அதிகாலை பாகிஸ்தான் பகுதிக்குள் உள்ள பல்வேறு பயங்கரவாத அமைப்புகளின்…