திருச்சி லலிதா ஜூவல்லரி நகை கொள்ளை வழக்கில் முருகன் சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்.
திருச்சியில் உள்ள மிகப் பெரிய நகைக் கடையான லலிதா ஜுவல்லரியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி 30 கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் அந்த கடையிலேயே சுரங்கம் போல சுவரில் ஓட்டை போடப்பட்டு மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முக்கியமான கொள்ளைக்காரர்களாகிய முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோரை தேடும் பணி தீவிரப்பட்டது.
ஆனால் முருகனின் சகோதரி கனகவல்லி, மணிகண்டன் ஆகியோர் தான் சில தினங்களில் கைது செய்யப்பட்டனர். அதன்பின்பு முருகன் அக்டோபர் 11 ம் தேதியும் சுரேஷ் அக்டோபர் 10-ஆம் தேதியும் செங்கம் நீதிமன்றத்தில் தாங்களாகவே வந்து சரணடைந்தனர். 25 கிலோ தங்க நகைகள் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து 162 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் குற்றப்பத்திரிக்கை முருகன் மீதும் சுரேஷ் மீதும் தாக்கல் செய்யப்படாத நிலையில்,ஜே.எம்-1 நீதிமன்றம் அவர்களுக்கு ஜாமீன் வழங்க முன்வந்தது.
இதனை அடுத்து விரிவான குற்றப்பத்திரிக்கை அவசர அவசரமாக தயார் செய்யப்பட்டு இன்ஸ்பெக்டர் கோசல்ராம் உட்பட 25 பேர் சாட்சிகளாக கொண்டு 5 பேர் மீது குற்றப்பத்திரிக்கை அன்மையில் ஜே.எம்-1 முன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் கூறிய போது, முருகன் போன்றோருக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி கொடுக்கும் நோக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து விட்டோம். நீதிமன்ற விசாரணையில் முருகன், சுரேஷ் உள்ளிட்டோருக்கு விரைவில் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படலாம் எனக் கூறியுள்ளனர்
சென்னை : மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில்…
பிரான்ஸ் : நடிகர் மற்றும் ரேஸரான அஜித் குமார் குட் பேட் அக்லி திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் ரேஸிங்கில் ஈடுப்பட்டு…
அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…
அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…
சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக அரசு…
சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…