vijayakanth [Imagesource : The Economic times]
நாங்குநேரி சம்பவத்தை குறிப்பிட்டு அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பள்ளி மாணவர் மீது சாதிய ரீதியிலான நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர்களிடையே ஏற்பட்ட சாதிய பாகுபாடு காரணமாக 12-ஆம் வகுப்பு மாணவன் சின்னதுரை, அவரது சகோதரி மீது, சக மாணவர்கள் கொடூரமாக தாக்கிய சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
பள்ளி மாணவர்களிடையே சாதிய சிந்தனையை தூண்டி அவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி பிரச்சனைக்காக நடக்கும் கொடூர தாக்குதல்களை முற்றிலுமாக தடுக்க தமிழக அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
இந்த சம்பவம் அடங்குவதற்குள் கலவர பூமியாக மாறியுள்ள நாங்குநேரியில், பதற்றத்தை தணிக்கவும், சட்டம் ஒழுங்கை காப்பாற்றவும் தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் சூழ்ச்சியாளர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் சாதியை ஒழிக்க முடியாது என்று தனது அறிக்கையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் குறிப்பிட்டிருக்கிறார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…