இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற என கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
பீகார் சட்டமன்றத்தில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கும் நிலையில் மு.க ஸ்டாலின் இந்த கோரிக்கையை வைத்துள்ளார்.
மேலும் என்.பி.ஆர் தொடர்பாக தமிழக அரசு எழுதிய கடிதத்துக்கு, மத்திய அரசு பதிலளித்துள்ளதா..? என்ற கேள்வியும் எழுப்பினார். இதற்கு பதில் அளித்த ஆர்.பி.உதயகுமார் , என்.பி.ஆரில் உள்ள சந்தேகங்கள் குறித்து தமிழக அரசின் கடிதத்திற்கு, மத்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என கூறினார்.
இதையெடுத்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தேசிய மக்கள்தொகை பதிவேட்டிற்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற என கோரிக்கை வைத்ததற்கு பதிலளித்த ஆர்.பி.உதயகுமார் , நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய சட்டத்திற்கு எதிராக தீர்மானம் போட்டால் அது சட்டத்தை கட்டுப்படுத்தாது என கூறினார்.
மேலும் மக்களை ஏமாற்றும் பொய்யான தீர்மானத்தை நாங்கள் போடவில்லை என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…