பாஜக தலைமையில் NDA கூட்டணி 330 இடங்களில் வெற்றி பெரும்.! எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை.!

Published by
மணிகண்டன்

பாஜக தலைமையில் NDA கூட்டணியில் 330 இடங்களில் வெற்றி பெரும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

நேற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) கட்சிகளின் ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது . இதில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா, பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி என பலர் கலந்துகொண்டனர்.

அதிமுக – பாஜக கூட்டணி : 

டெல்லியில் பாஜக ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி பல்வேறு கருத்துக்களை குறிப்பிட்டார். அவர் கூறுகையில், அதிமுக  அம்மா (ஜெயலலிதா) இருக்கும் போதும் சரி, எம்ஜிஆர் இருந்தபோதும் சரி எங்களோடு ஒருமித்த கருத்தோடு இருப்பவர்களுடன் எப்போதும் கூட்டணி அமைத்து அதில் வெற்றி பெற்றுளாம். அதே போல அதிமுக இப்போதும் செயல்படுகிறது.

330 இடங்களில் வெற்றி :

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி NDA ஆட்சியமைத்த பின்னர் இந்தியாவின் வளர்ச்சி எப்படி இருக்கிறது என பார்க்க வேண்டும். கொரோனாவில் பல்வேறு நாடுகளும் சிக்கி தவித்த போது, இந்தியாவில் நெருக்கடி நிலை ஏற்படவில்லை. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 330 இடஙக்ளில் வெற்றி பெரும்.

1.70 கோடி அதிமுக உறுப்பினர்கள் :

அதிமுகவும் , பாஜகவும் ஒருமித்த கருத்தோடு தான் செயல்படுகிறோம். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படுகிறது. அதிக அளவு உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக. நேற்று வரை அதிமுகவில் 1.70 கோடி உறுப்பினர்களாக உள்ளனர்.  ஜெயலலிதா இருந்த போது 1.5 கோடியாக உறுப்பினர்கள் எண்ணிக்கை இருந்தது. எதிர்காலத்தில் சிறப்பான ஆட்சி கொடுக்கும் என்ற நம்பிக்கையில் புதியவர்கள் கட்சியில் இணைகிறார்கள்.

2ஜி ஊழல் வழக்கு :

இந்தியாய்வில் பல மாநிலங்கள் உள்ளது. ஆனால் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசாங்கம் திமுக தான். அவர்கள் எங்களை பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை. திமுக காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் 2ஜி ஊழல் வழக்கில் ஆ.ராசா, கனிமொழி கைது செய்யப்பட்டனர்.

செந்தில் பாலாஜி – பொன்முடி :

அதே போல கர்நாடகாவில் முதலவர் ஸ்டாலினை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் ஊழல் வழக்கு காரணமாக சிறை சென்றவர். செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் சிக்கி கைது செய்யபட்டு சிறையில் இருக்கிறார். அமைச்சர் பொன்முடி மீது விசாரணை நடைபெறுகிறது. என திமுகவினர் பற்றி பல்வேறு விமர்சனங்களை எடப்பாடி பழனிச்சாமி முன்வைத்தார்.

கோடநாடு கொலை வழக்கு :

கோடநாடு கொலை வழக்கு பற்றி பேசுகையில், கோடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு வாதாடியாவர் திமுகவினர். அவர் தான் தற்போது நீலகிரி மாவட்ட அரசு வக்கீலாக இருக்கிறது. குற்றவாளிகளுக்கு ஜாமீன் கொடுத்தது திமுகவினர் என பல்வேறு குற்றசாட்டுகளை எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்கள் மத்தியில் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தவெக-வின் பொதுச் செயலாளர் ஆகிறார் IRS அதிகாரி அருண்ராஜ்.?

சென்னை : தவெக-விற்கு ஆலோசகராக செயல்பட்டு வந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதாவது, தமிழக…

15 minutes ago

SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!

லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…

2 hours ago

அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!

அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…

3 hours ago

ரெட், ஆரஞ்சு அலர்ட் எதிரொலி – விரையும் தேசிய பேரிடர் மீட்புப்படை.!

நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…

4 hours ago

RCB vs SRH: வெற்றி யாருக்கு? ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி பந்துவீச்சு.!

லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…

4 hours ago

சோனியா – ராகுல் காந்தி சந்திப்பு..,”குடும்பத்தாருடன் இருப்பது போன்ற உணர்வு” – மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.!

டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…

5 hours ago