அடியெடுத்து வைத்தால் அரஸ்ட்…அதிதீவிர வளையத்தில் தலைநகர்

Published by
kavitha

கொரோனா வைரஸ் காற்றை விட அதி விரைவாக பரவி வருகிறது தமிழகத்தில் மேலும் அதன் பரவல் மிக  உக்கிரமாக தலைநகரை தாக்கி வருகிறது.இதன் பரவலை கட்டுப்படுத்த மீண்டும் அங்கு கட்டுப்பாட்டுகளை கட்டி உள்ளது அரசு.முன்பு இருந்த கட்டுப்பாடுகள் போல் இல்லாமல் தற்போது பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கடுமையாக்கப்படுகிறது.

இந்த கட்டுப்பட்டால் பெட்ரோல் பங்க், மளிகை, காய்கறி உள்பட அனைத்து கடைகளும் மூடப்படுகிறது.அத்தியவசிய  தேவைகளான பால், மருந்து, பத்திரிகை விற்பனைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. உத்தரவு பிறப்பிப்பட்ட நிலையில் உத்தரவினை மீறி மக்கள் வீட்டை வீட்டு வெளியே வந்தால் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கட்டுப்பாடுகள் குறித்த முழு விவரம் இதோ:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று முன்தினம் அதாவது 19ந்தேதி முதல் வருகிற 30ம் தேதி வரையிலான  12 நாட்களுக்கு முழு ஊரடங்கு ஆனது அமல்படுத்தப்பட்டுள்ளது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே காய்கறி, மளிகை கடைகளில் பொருட்கள் விற்க அனுமதி வழங்கப்பட்டது. பெட்ரோல் பங்குகள் இரவு 8 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது. அதே போல் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டது.அதில் இரவு 8 மணி முதல் 9 மணி பார்சல் மட்டுமே வழங்க அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவுரைப்படியே  நேற்று முன்தினம்(19ந்தேதி), நேற்றும் காய்கறி, மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகள் இயங்கி வந்தது. இதனோடு மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் விதமாக சென்னை அண்ணாசாலை, காமராஜர் சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ராஜிவ் காந்தி சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் அனைத்தும் மூடப்பட்டது. இவைகளை  இணைக்கும் சாலைகளும் மூடப்பட்டது. இது மட்டுமின்றி தெருக்களிலும் கூட பேரிகார்டு மூலம் அடைக்கப்பட்டது. மக்கள் எங்கேயும் செல்ல முடியாத அளவுக்கு நடவடிக்கையானது எடுக்கப்பட்டி இருந்தது.

அலுவலகம் செல்பவர்கள் அரசின் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டை, அலுவலக அடையாள அட்டை மற்றும் இ-பாஸ் வைத்திருந்த நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். அடையாள அட்டை இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எவ்வித அனுமதியும் இன்றி வெளியே சுற்றிய 3400 வாகனங்கள் நேற்று முன்தினம் மட்டுமே பறிமுதல் செய்யப்பட்டது. இதே போல நேற்று 4 மாவட்டங்களில் ஊரடங்கு மிக கடுமையாக்கப்பட்டது. மக்கள்  வெளியே வந்தாலே அவர்களை கடுமையாக எச்சரித்து திருப்பி அனுப்பப்பட்டனர். வாகனங்களில் சுற்றியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன், வாகனங்கள் பறிமுதலும்  செய்யப்பட்டது.இந்த நடவடிக்கையின் காரணமாக சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது.

இந்த நிலையில் 21ம் தேதியாகிய இன்று முதல் வருகிற 28ம் தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் எந்தவொரு தளர்வுகளும் இல்லாத தீவிர ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நேரத்தில் அனுமதி அளிக்கப்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்ரோல் பங்குகளும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பால், மருந்து கடைகள், பத்திரிகை அலுவலகங்கள் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மருத்துவ தேவையை தவிர்த்து யாரும் வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு எச்சரிக்கையும் மீறி தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டில் இருந்து இன்று வெளியே சாலையில் நடந்து சென்றால் உடனடியாக அவர்களை கைது செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும் மக்கள் நடமாட்டத்தை தடுக்க போலீசார் வாகன ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இது மட்டுமின்றி  “ட்ரோன்” காமிரா மூலமாக அனைத்து தெருக்களும்  கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று தீவிர ஊரடங்கு பிறப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published by
kavitha

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

17 minutes ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

1 hour ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

2 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

2 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

3 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

3 hours ago