நாட்டிலேயே கொரோனா பரிசோதனையில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தமிழகத்தில் தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் உள்ளதாகவும், பரிசோதனைகளும் இங்குதான் அதிகமாக செய்யப்படுவதாகவும் தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியதால் சென்னை, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, விழுப்புரம், மதுரை போன்ற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை தொடங்கப்பட்டது. அங்கு தினந்தோறும் ஒரு மருத்துவமனையில் 100க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் தற்போது 36 அரசு, 16 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இதுவரைக்கும் 2,16,416 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றிற்கு 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிகம் எண்ணிக்கையில் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்தில் மொத்தம் 52 ஆய்வகங்கள் உள்ளன.
தமிழகத்தில் பரிசோதனைகளை அதிகரித்ததால் பாதிப்பும் அதிகமாக உயர்ந்து வருகிறது மேலும் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மகாராஷ்டிராவும் 2-வது இடத்தில் குஜராத்தும் மற்றும் 3 வது இடத்தில் டெல்லியும் உள்ளன. ஆனால் இறப்பு எண்ணிக்கையிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் குறைவாகவே உள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…