ஹெலிகாப்டரில் ஆடம்பர பிரச்சாரம் செய்கிறார் – கமலை சாடிய முன்னாள் அமைச்சர் வளர்மதி!

புதிதாக கட்சி தொடங்கி விட்டு சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக கமலஹாசனை மறைமுகமாக முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் சாடியுள்ளார்.
தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டிற்கான சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, புதிதாக துவங்கியுள்ள கட்சிகளும் தங்களது வாக்குகளை சேகரிப்பதற்காக தற்பொழுது பிரச்சாரத்தில் ஈடுபட துவங்கி விட்டனர். ஒவ்வொரு கட்சிகளும் மற்ற கட்சிகளை சாடி தங்களது கட்சிகளை பெருமைப்படுத்தி பேசிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இன்று சென்னையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் வளர்மதி அவர்கள் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் ஒருவர் சிறப்பு விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் சென்று ஆடம்பரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருவதாக கமலஹாசன் அவர்களை மறைமுகமாக சாடியுள்ளார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பொதுமக்களிடம் கொண்டு வரக்கூடிய பொய் பிரச்சாரங்களை அதிமுக முறியடிக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
SRH vs RCB: மாஸ் காட்டிய ஹைதராபாத்.! வெளுத்து வாங்கிய இஷான் கிஷான்.., ஆர்சிபி-க்கு இமாலய இலக்கு.!
May 23, 2025
அடேங்கப்பா!! வியப்பில் ஆழ்த்திய கூகுள்.! ‘Veo 3’ என்ற புதிய AI தொழில்நுட்பம் அறிமுகம்.!!
May 23, 2025