சொகுசு கார் விவகாரம்: இன்று விசாரணைக்கு வரும் விஜயின் மேல்முறையீடு மனு !!

Published by
பால முருகன்

சொகுசு கார் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு.

கடந்த 2012ம் ஆண்டு பிரிட்டன் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ‘ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்’ காருக்கு நுழைவு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு கேட்டு, நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு அத்துடன், விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், அபராத தொகையை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு 2 வாரங்களில் வழங்க வேண்டும். வரி என்பது நன்கொடை அல்ல, கட்டாய பங்களிப்பு என நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கூறியிருந்தார். நடிகர்கள் ரீல் ஹீரோக்களாக இல்லாமல், ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார். வரி ஏய்ப்பு செய்தால் அது தேசத் துரோகம் என தெரிவித்து இருந்தார்.

இதனைத்தொடர்ந்து நடிகர் விஜய்க்கு ஆதரவாகவும், எதிர்த்தும் பல்வேறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் உலா வந்தது. பின்னர் சொகுசு கார் தொடர்பாக உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரது தரப்பு வழக்கறிஞர் குமரேசன் தெரிவித்தாக கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

நடிகர் விஜயின் மேல்முறையீடு வழக்கு இன்று விசாரணை நடைபெறுகிறது. அதேசமயம் அபாரம் விதிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்ப்பில் தன்னைப்பற்றி குறிப்பிட்டுள்ள விமர்சனங்களை நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

28 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

44 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago