ஆன்லைன் சூதாட்ட தடை செல்லும் – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Online Games Case on Madras high court

தமிழ்நாட்டில் திமுக அரசு ஆட்சி அமைந்த பிறகு, நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளினால் (சூதாட்டம்) பணத்தை இழந்து அதிக கடன்களை வாங்கி பலர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வுகள் தமிழகத்தின் அரங்கேறியுள்ளன. இதனை தடுக்க தமிழக அரசு புதிய சட்டத்தை இயற்றியது.

கடந்த ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டமானது நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநில அரசுக்கு ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்ய உரிமை இல்லை எனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.

முன்னதாக, தமிழக அரசு மற்றும் ஆன்லைன் நிறுவனங்கன் என இரு தரப்பினரும் தங்கள் தரப்பு வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே, ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தங்கள் தரப்பு வாதங்களை பதிவு செய்த நிலையில், தமிழக அரசு கால அவகாசம் கேட்டிருந்தது. அதன்படி தமிழக அரசுக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டு இருந்தது.

இது குறித்து தமிழக அரசு குறிப்பிடுகையில் ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து இதுவரை 32 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த ஆன்லைன் சூதாட்டத்தால் படித்த இளைஞர்கள், தினக்கூலி வேலையாட்கள் என பலர் பணத்தை இழக்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த சட்டத்தை இயற்ற மாநில அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்றும் விளக்கம் அளித்து இருந்தது.

இருதரப்பு வாதங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தீர்ப்பு தேதியானது தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. அதன்படி, இன்று பிற்பகல் 2 மணி அளவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் பதியப்பட்ட வழக்கில் நீதிபதி கங்காபூர்வாலா, ஆதிகேசவலு அடங்கிய நீதிபதி அமர்வுக்கு முன்பு, இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே ஓபிஎஸ்-ன் நிலைப்பாடு – வைத்திலிங்கம்

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தமிழகத்தில் அதிர்ஷ்ட ஆன்லை விளையாட்டுகளை தமிழ்நாடு அரசு தடை விதித்தது செல்லும் என அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

தமிழக அரசின் சட்டத்தை எதிர்த்து விளையாட்டு நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை தடை செய்த பிரிவுகளை ரத்து செய்த உயர்நீதிமன்றம், திறமைக்கான விளையாட்டுக்களான ரம்மி போன்ற விளையாட்டுகளை விளையாடுவதற்கு வயது, நேரம் உள்ளிட்டவை தொடர்பாக அரசு விதிகளை உருவாக்கிக் கொள்ளலாம் எனத் தீர்ப்பளித்துள்ளது.

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 38 பேர் விடுதலை – இலங்கை நீதிமன்றம்!

ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திமுக அரசு அனுப்பிய மசோதாவை ஆளுநர் ரவி பல மாதங்கள் கிடப்பில் போட்டிருந்தார். தமிழ்நாடு அரசின் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பியது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 05052025
Kahmir person jumped into river and died
DMK MP A Rasa stage collapse
NEET exam 2025
India Pakistan - Postal Services