நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம்.!
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி : ‘நீட் தேர்வின்போது ஏற்பட்ட மின்வெட்டால், தேர்வில் தனது செயல்திறன் பாதிக்கப்பட்டது’ என மாணவி புகார் அளித்திருந்தார்.
கடந்த மே 4-ஆம் நாள் நடைபெற்ற இளங்கலை நீட் தேர்வின்போது, ஆவடியில் உள்ள ஒரு பள்ளியில் கனமழை காரணமாக 1.15 மணி நேரம் மின் தடை ஏற்பட்டு, மழை நீரும் புகுந்ததால் சரியாக தேர்வை எழுத முடியவில்லை எனக் கூறி மறு தேர்வு நடத்த வேண்டும் என 13 மாணவர்கள் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.ஆர்.எல். சுந்தரேசன், “மின் தடை ஏற்பட்டதா?” என்று கேட்டார். அப்படி மின் தடை ஏற்பட்டால், மாணவர்களின் கோரிக்கையை பரிசீலிப்பது குறித்து பதிலளிக்க அவர்களுக்கு அவகாசம் வழங்க வேண்டும் என்றார்.
மிரளும், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என தேசிய தேர்வு முகமை (NTA), மத்திய அரசு மற்றும் மத்திய பிரதேச மேற்கு மண்டலத்தின் மின்சார விநியோக நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், வழக்கின் விசாரணையை ஜூன் 2ம் தேதிக்கு ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம், அதுவரை நீட் தேர்வின் முடிவுகளை வெளியிடக் கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றமும் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதித்திருந்தது.