AIADMK FORMER MINISTER [FILE IMAGE]
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. உணவுத் துறை அமைச்சராக இருந்த போது, பொருட்கள் கொள்முதலில், ரூ.350 கோடிக்கு முறைகேடு செய்துள்ளதாக அளித்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரி ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த புகழேந்தி வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ், பொது விநியோக திட்டத்தில் பருப்பு மற்றும் எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்ததில் ரூ.350 கோடி முறைகேடு செய்துள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக 2018ம் ஆண்டு புகார் அளித்த நிலையில், முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்கு தொடர்ந்து இருந்தார்.
சேரி சர்ச்சை… குஷ்பூ வீட்டின் முன் போராட்டத்தில் களமிறங்கிய காங்கிரஸ் கட்சியினர்.!
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் காமராஜர் மீதான முறைகேடு புகாரில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்று நீதிபதி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கேள்வி எழுப்பினர். அப்போது, லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. இதன்பின், ரூ.350 கோடி முறைகேடு புகார் மீதான நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தர லஞ்சஒழிப்புத்துறை உத்தரவிட்டு, காமராஜ் மீதான புகார் குறித்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ்-க்கு எதிரான முறைகேடு புகாரில் முகாந்திரம் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் மீதான முறைகேடு புகாரில் 6 மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
6 மாதங்களில் விசாரணையை முடிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பு உத்தரவாதத்தை ஏற்று வழக்குகளை முடித்து வைத்தார் சென்னை உயர்நீதிமன்றம். மேலும், புகார்தாரர்கள் இருவரையும் டிசம்பர் 6ம் தேதி புலன் விசாரணை அதிகாரி முன் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அகமதாபாத் : இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில்…
சென்னை : இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது…
ஈரோடு : பண்ணை வீட்டில் தனியாக இருந்த தம்பதி கொலை செய்யப்பட்டதாக நேற்று இரவு ஈரோடு பகுதி போலீசாருக்கு தகவல்…
நெல்லை : இன்னும் ஒரு வருடத்திற்குள் தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் தற்போதே கூட்டணி குறித்த பேச்சுக்கள் அரசியல்…
மும்பை : WAVES 2025 மாநாடு நேற்று மும்பையில் தொடங்கியது. பிரதமர் நரேந்திர மோடி நேற்று விழாவில் கலந்து கொண்டு…