அமமுகவை பதிவு செய்வதற்கு தடை விதிக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கின் விசாரணை ஏற்கனவே நடைபெற்றபோது, கட்சி பதிவுக்காக புகழேந்தி அளித்த பிரமாண பத்திரத்தை நீக்கிவிட்டு பதிவு குறித்து பரிசீலிக்க தேர்தல் ஆணையத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.மேலும் அமமுக-வை பதிவு செய்ய தடை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம், தினகரன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
பின்னர் இதன் வழக்கு விசாரணை நடைபெற்றது.இதில் தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கடந்த நவம்பர் 25ம் தேதி அமமுக அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்டது என்று கூறினார்.பின்னர் ஒரு அரசியல் கட்சியை பதிவு செய்ய, அக்கட்சியின் சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்கள், கட்சியில் இருந்து விலகிவிட்டால், மாற்று நபர்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யலாமா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.மேலும் இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…
புல்வாமா : ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவின் டிரால் பகுதியில் உள்ள நாடரில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக…