கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், வருடந்தோறும் கோலாகலமாக நடைபெறக்கூடிய மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று பக்தர்கள் இன்றி நடைபெற்றுள்ளது.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் புதிதாக பாதிக்கப்படுவதுடன், நாளுக்கு நாள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து கொண்டே இருக்கின்றனர். கொரோனா தொற்றை தடுப்பதற்காக ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், வருடம் தோறும் கோலாகலமாக நடைபெறக்கூடிய மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று பக்தர்கள் இன்றி நடைபெற்று முடிந்துள்ளது.
பத்தாம் நாளான இன்று மிக முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றாலும், பக்தர்கள் நேரில் செல்ல முடியவில்லை. ஆனால் கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் ஆன்லைன் மூலமாக பக்தர்கள் திருக்கல்யாணத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் திருக்கல்யாணம் நடைபெற்றுள்ளது. மணப்பெண்ணாக அலங்கரிக்கப்பட்ட மீனாட்சி 108 விளக்குகளுக்கு நடுவே பட்டுப்புடவை உடுத்தி காட்சி அளித்துள்ளார்.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…