Immanuvel Sekaran : தியாகி இம்மானுவேல் சேகரன் 66வது நினைவுநாள்.! அரசியல் தலைவர்கள் வருகை.. பாதுகாப்பு பணிகள் தீவிரம்.!

Immanuvel Sekaranar Memorial

விடுதலைப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் அவர்களின் 66 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (செப்டம்பர் 11) அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்திற்கு தமிழக முழுவதிலும் இருந்து பலர் மரியாதை செலுத்துவதற்கு வரவுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மதுரை வழியாக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் மூலம் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் வர உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை மாநகர், புறநகர் பகுதிகளிலும், பரமக்குடி பகுதிகளிலும் சோதனை சாவடிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் 24 மணி நேரமும் ரோந்து பணிகள் மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக அரசு சார்பில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வர உள்ளார். அதேபோல் அதிமுக சார்பிலும், மற்ற அரசியல் கட்சியினர் சார்பிலும் அரசியல் தலைவர்கள் பரமக்குடிக்கு வர உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 பகுதிகள் பதற்றம் நிறைந்த பகுதிகளாக கண்டறியப்பட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. மரியாதை செலுத்துவதற்காக வருபவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட வழியில் மட்டுமே வந்து மரியாதை செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்