மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதிலும் மெகா ஊழல்- ஸ்டாலின் !

Published by
murugan

15.66 லட்சம் மடிக்கணினிகள் வழங்குவதற்கான ‘எல்காட்’ டெண்டரில் பங்கேற்ற சீன நிறுவனம் ஒன்றுடன் நடைபெற்றுள்ள ஊழல் திருவிளையாடல்கள் பேரதிர்ச்சியளிக்கிறது. சீன நிறுவனம் இரு மாதிரிகளை (model) அளித்து அதன் சோதனை அறிக்கையும்(TestReport) கொடுத்திருந்தது.

ஒரு மாடல் செயல்திறனுக்கு 465 மதிப்பெண்கள்; இன்னொரு மாடல் 265 மதிப்பெண்கள். ஒன்று தரம் குறைந்தது என்றாலும் இரண்டும் ஒரே விலை. அதிமுக அரசு குறைந்த செயல்திறன் கொண்ட மடிக்கணினிக்கு ஆர்டர் கொடுத்து ஒரு மடிக்கணினிக்கு ரூ.3000 விதம் அடைந்த சட்டவிரோத லாபம் மட்டும் 469 கோடி ரூபாய்.

மெமரி 4 ஜி.பி.யிலிருந்து 8 ஜி.பி.யாக  அதிகரிக்கும் வசதி இருக்க வேண்டும் என்று டெண்டரில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த வசதி இல்லை மேற்கண்ட வசதியை பெற ரூபாய் 2500 மதிப்புள்ள புதிய ‘மதர் போர்டை’ பயன்படுத்த வேண்டுமாம்.

அதிலும் நிறுவனத்திற்கு ரூ.392 கோடி லாபம். 1921 கோடி ரூபாய் திட்டத்தில் நிகழ்த்தியுள்ள மகாபாதக மெகா ஊழல் இது; மொத்த நிதி ஒதுக்கீட்டில் ரூ .1,475 கோடி ரூபாய் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு விட்டது. மாபெரும் ஊழலுக்கு வித்திட்டுள்ள முதலமைச்சர் பழனிச்சாமி மீதமுள்ள 456 கோடி ரூபாயை நிறுத்திவைத்து, எந்தவித தயக்கமுமின்றி அந்நிறுவனத்தை ‘பிளாக் லிஸ்ட்’ செய்து தரக் குறைவான கணினியை வழங்கியதற்காக பெருந்தொகையினை  அபராதமாக அந்த நிறுவனத்திலிருந்து வசூலிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Published by
murugan

Recent Posts

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை.!

சென்னை : நகர்புறங்களில் பெரும்பாலும் கேன் குடிநீர் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் குடிநீர் கேன் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும்…

6 minutes ago

“ஆர்யா என் வீட்டையே இடிச்சிட்டான்..” – இசை வெளியீட்டு விழாவில் உண்மையை உடைத்த சந்தானம்.!

சென்னை : நடிகர் சந்தானம் நடித்து முடித்திருக்கும் 'டிடி நெக்ஸ்ட் லெவல' என்கிற நகைச்சுவைப் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.…

1 hour ago

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

2 hours ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

3 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

4 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

5 hours ago