23ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

கொரோனா வைரஸ் முன்னெச்சிரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மார்ச் 23 முதல் 31 வரை மெட்ரோ ரயில் சேவைகளில் மாற்றம் என சிஎம்ஆர்எல் (CMRL) தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவான அறிக்கையை வெளியிட்ட அந்நிறுவனம், காலை 4.30 மணி முதல் 6 மணி வரை, காலை 10 மணிமுதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் இரவு 11 மணிவரை ரயில்கள் ஓடாது என தெரிவித்தனர்.
இந்நிலையில்,மார்ச் 23 முதல் காலை 6 முதல் 8 மணிவரை அத்தியாவசிய பணிகளுக்கு செல்வோருக்கு மட்டும் அனுமதி எனவும், காலை 8 முதல் 10 மணிவரை அலுவலக பணிகளுக்கு செல்வோர்களுக்கு மட்டும் ரயிலில் அனுமதி என அந்நிறுவனம் கூறியுள்ளது. மேலும், பணிகளை முடித்து திரும்போருக்காக மாலை 4 முதல் இரவு 8 மணிவரை மெட்ரோ ரயில் சேவைகள் இயங்கும் என அந்நிறுவனம் தெரிவித்தது.
லேட்டஸ்ட் செய்திகள்
தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!
July 14, 2025
உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!
July 14, 2025