Anbil Mahesh is fine [file image]
தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிறகு கிருஷ்ணகிரியில் நடைபெறும் விழாவிற்காக பங்கேற்க, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் வழியாக செல்லும்போது அவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.
இதனால் தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலுதவி சிகிச்சைக்கு பிறகு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஓய்வெடுத்து வருவதாகவும் தகவல் வெளியானது. பின்னர் மேல் சிகிச்சைக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் பெங்களூருவில் உள்ள நாராயண ஹிருதயாலயா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என தகவல் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில், உடல்நல குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பூரண நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ பரிசோதனையில் மாரடைப்பு தொடர்பான எந்த வித அறிகுறிகளும் இல்லை எனவும் மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், மருத்துவ பரிசோதனை முடிந்து அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னை திரும்புகிறார் எனவும் கூறப்படுகிறது.
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…