Anitha Radhakrishnan's sons appear in court! [file image]
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கை செப்.12ம் தேதிக்கு ஒத்திவைத்தது தூத்துக்குடி நீதிமன்றம். அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு ஒத்திவைக்கப்பட்டது. இன்று உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் வழக்கு செப்.12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
திமுக ஆட்சியின் போது வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ.4.90 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது. தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தது. தூத்துக்குடி முதன்மை குற்றவியல் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது.
இதையடுத்து, அனிதா ராதாகிருஷ்ணன் மீது மாநில லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கை அடிப்படையாக வைத்து, 2020-ஆம் ஆண்டு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்காக அமலாக்கத்துறை பதிவு செய்தது. மேலும், சொத்துகுவிப்பு வழக்கில் தங்களையும் இணைக்கக்கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்தது. அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்டது.
மும்பை : இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), அடுத்த நிதியாண்டில் (2025-26) தனது 12,200…
சென்னை : குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.…
புதுடெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மக்களவையில் இன்று காலை முதல் 16 மணி நேர சிறப்பு விவாதம் நடைபெற…
ஜெருசலேம் : இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள மக்கள் நெருக்கமான பகுதிகளான காசா நகரம், டெய்ர் அல்-பலாஹ், மற்றும் அல்-மவாசி…
திருவள்ளூர் : மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான செய்தி சில நாட்களுக்கு முன்பு வெளியாகி,…
மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…