அமைச்சர் ராதாகிருஷ்ணன் வழக்கு ஒத்திவைப்பு!

அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த மனு மீதான தீர்ப்பு இன்று பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதி செல்வம் விடுமுறை என்பதால், வழக்கு வரும் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம்.
இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.4.90 கோடி சொத்து சேர்த்தாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதியப்பட்டது. அதன்படி, அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள் என 7 பேர் மீது 2006ல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, ரூ.6.50 கோடி மதிப்பிலான 18 சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
அனிதா ராதாகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த சமயத்தில் சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் இணைத்துக்கொள்ள கோரி அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்திருந்தது. இந்த மனு மீதான தீர்ப்பு இன்று வழங்கப்படும் என கூறப்பட்டது. இந்த நிலையில், விசாரணை நீதிபதி விடுப்பு என்பதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.