“சொந்த வீட்டிலேயே துன்புறுத்தல்” – கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட நடிகை தனுஸ்ரீ தத்தா.!

நள்ளிரவில் வீட்டுக்கு மேலே இருந்து மிக மோசமான சத்தம் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் யாரும் கண்டுகொள்ளவில்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

Tanushree Dutta cry

சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த வீட்டில் துன்புறுத்தப்படுவதாகவும், உதவி கோரியும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். நேற்று கண்ணீருடன் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தை பரபரப்பாக்கியது.

அதில் தனது சொந்த வீட்டிலேயே தன்னை கொடுமைப் படுத்தப்படுவதாக கதறியுள்ளார். 2018-ல் MeToo வழக்கு தொடுத்ததில் இருந்து வீட்டிற்கு மேலே, கதவிற்கு வெளியே அடிக்கடி சத்தம் எழுப்பப்பட்டு தனது நிம்மதியை கெடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அந்த வீடியோவில், இதனால் மனரீதியாகவும் உடல்ரீதியாகவும் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நள்ளிரவில் தனது வீட்டு மாடியிலிருந்து மோசமான சத்தங்கள் வருவதாகவும், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும் வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2008-ல் Horn OK Pleassss படப்பிடிப்பின்போது நானா படேகர், கணேஷ் ஆச்சார்யா உள்ளிட்டோர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் கூறியிருந்தார். இந்த வழக்கு 2018-ல் பதிவு செய்யப்பட்டு, ஆதாரமின்மை காரணமாக நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தற்போது தனுஸ்ரீ மீண்டும் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாலிவுட் மாஃபியாக்கள், அரசியல்வாதிகள் மற்றும் சமூக விரோத கும்பலால் துன்புறுத்தப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்