சென்னை : தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா. தனது சொந்த வீட்டில் துன்புறுத்தப்படுவதாகவும், உதவி கோரியும் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். நேற்று கண்ணீருடன் அவர் வெளியிட்ட வீடியோ இணையத்தை பரபரப்பாக்கியது. அதில் தனது சொந்த வீட்டிலேயே தன்னை கொடுமைப் படுத்தப்படுவதாக கதறியுள்ளார். 2018-ல் MeToo வழக்கு தொடுத்ததில் இருந்து வீட்டிற்கு மேலே, கதவிற்கு வெளியே அடிக்கடி சத்தம் எழுப்பப்பட்டு தனது நிம்மதியை கெடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் […]