கால்பந்தாட்டம் மீது கலைஞருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு.! அமைச்சர் உதயநிதி பேச்சு.!

Published by
மணிகண்டன்

சென்னை ராயப்பேட்டையில் கால்பந்தாட்ட போட்டியை துவங்கி வைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். 

திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் இன்று சென்னை ராயப்பேட்டையில் கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தொடங்கி வைத்தபின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழக விளையாட்டுத்துறை பற்றி பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார்..

அவர் கூறுகையில், திமுகவுக்கு விளையாட்டின் மீது அதிக ஆர்வம் உண்டு. அதானால் தான் திமுகவில் விளையாட்டு மேம்பாட்டு அணி உருவாக்கப்பட்டது. திமுக தலைவர் கலைஞருக்கு கால்பந்தாட்டம் என்றால் மிகவும் பிடிக்கும். அவர் எழுதிய நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் முன்னுரையில் குறிப்பிடுகையில் கூட, கால்பந்தாட்டத்தில் பந்தை எப்படி வேண்டுமானாலும் விதவிதமாக கையாளலாம். ஆனால் கோல் போஸ்ட்டிற்குள் பந்து சென்றால் மட்டுமே வெற்றி. அதுபோல தான் வாழ்வும்  என குறிப்பிட்டு இருப்பார் என கலைஞர் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டு பேசினார்.

அடுத்து தமிழக முதல்வருக்கு பேட்மிட்டன், கிரிக்கெட் போட்டிகள் பிடிக்கும். எனக்கு விளையாட்டின் மீதுள்ள ஆர்வம் காரணமாக தான் விளையாட்டு துறை அமைச்சராக என்னை முதல்வர் நியமித்தார். அமைச்சராக பொறுப்பேற்று 6 மாதங்கள் ஆகிவிட்டன. அமைச்சரான பின்னர் நான் போட்ட முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பைக்கான கையெழுத்து தான்.

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் ஜூலை 25ஆம் தேதி இறுதி போட்டி நடைபெறும். அந்த போட்டிகளை காண முதல்வர் நேரில் வரவுள்ளார். ஆகஸ்ட் மாதம் சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெற உள்ளது. மத்திய விளையாட்டு துறை நமது செயல்பாடுகளை பார்த்து இந்தாண்டு கேளோ இந்தியா போட்டிகளை தமிழகத்தில் நடத்த அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தை விளையாட்டிலும் முதல் மாநிலமாக  கொண்டுவர தொடர்ந்து செல்படுவோம். தொகுதிக்கு ஒரு மினி ஸ்டேடியம். சரவேதச அளவிலான விளையாட்டு அரங்கம் தமிழகத்தில் அமைக்கும் பனி ஆகியவை செயல்பாட்டில் உள்ளன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

12 நாடுகளுக்கான வரிக் கடிதங்கள்.., ஜூலை 7 ஆம் தேதி வெளியிடப்படும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்.!

அமெரிக்கா : அமெரிக்கா வரி மற்றும் செலவீன குறைப்பு மசோதாவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். மசோதா சட்டமானதால்…

38 seconds ago

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

44 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

2 hours ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

2 hours ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

4 hours ago