அமைச்சர்கள் டெண்டர்களை எடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர்..? ஸ்டாலின்.!

Published by
murugan

டெண்டர்கள் மீது ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர்களே  போன் செய்து டெண்டர்களை எடுக்க சொல்லி கட்டாயப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது என ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள பெருந்துறையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில் தேர்தல் பரப்புரையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நான்காண்டு காலத்தில் எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள், காலியான அரசு பணியிடங்கள் நிரப்பட்டதா..? பொதுத்துறை நிறுவனங்களில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை நிரப்பட்டதா..? தமிழகத்தில் மூடப்பட்ட நிறுவனங்களில் திறக்க என்ன முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த தேர்தலில் ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை வாங்கி தருவதாக அதிமுக அரசு வாக்குறுதி கொடுத்தார்கள். ஆண்டுக்கு எத்தனை பேருக்கு வேலை கொடுத்து உள்ளீர்கள்..? தொழில்முனைவோர் மாநாட்டில் தொடங்கப்பட்ட தொழில்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.

இரண்டாவது தொழில் முனைவோர் மாநாடு நடத்தப்பட்டது. அதில் எத்தனை ஆயிரம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது..? தமிழக அரசு பணியாளர்கள் தேர்வு  தேர்வாணைய தேர்வுகள் ரத்து செய்ததற்கு என்ன காரணம், தமிழக பணியிடங்களில் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிக அளவு சேர்வதற்கு என்ன காரணம் அது எப்படி சாத்தியமானது என கேள்வி எழுப்பினார்.

முதல்வருக்கு இளைஞர்கள் மீது அக்கறை இருந்திருந்தால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருப்பார், இதை செய்ய மாட்டார் என்றால் அவருக்கு செய்ய தெரியாது. வீட்டிலிருந்தே புகார் அளிக்கலாம் என முதல்வர் கூறுகிறார், ஆனால் அது நிவர்த்தி செய்யப்படுமா..?  தேர்தல் நடக்கும் 6 மாதத்திற்கு முன்னதாகவே பெரிய அளவில் டெண்டர்கள் விட மாட்டார்கள். ஏனென்றால் ஆட்சி முடிவதற்குள் அவற்றை செய்ய முடியாது என்பதால் டெண்டர் தவிர்க்கப்படும்.

ஆனால் தற்போது பணிகள் முடிக்க முடியாது என்று தெரிந்தும் அவசர அவசரமாக டெண்டர் விடப்படுகிறது. அதிமுக ஆட்சியில் டெண்டர் கொள்ளை நடந்து கொண்டே இருக்கிறது. இந்த டெண்டர்கள் மீது ஆர்வம் காட்டாத ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர்களே நேரடியாக போன் செய்து டெண்டர்களை எடுத்துக்கொள்ளச் சொல்லி கட்டாயப்படுத்துவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது என அவர் தெரிவித்தார்.

Published by
murugan

Recent Posts

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

நண்பர்களுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய எம்.எஸ்.தோனி.!

சென்னை : பேட்டிங் அதிரடி சூறாவளி, விக்கெட் கீப்பிங்கில் மின்னல் வேகம், கேப்டன்ஷிப்பின் உச்சம் தொட்ட தமிழகத்தின் தத்துப்பிள்ளையான 'கேப்டன்…

20 minutes ago

அமெரிக்காவின் டெக்சாஸை புரட்டிப்போட்ட வெள்ளம்.., 28 குழந்தைகள் உட்பட 80 பேர் பலி.!

டெக்சாஸ் : அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியில் கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ்…

3 hours ago

கோவையில் இன்று சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி.!

கோவை : 2026 தேர்தலுக்காக இன்னும் சற்று நேரத்தில் இபிஎஸ் தனது சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார்.  இன்று (ஜூலை 7,…

3 hours ago

தமிழ்நாடு பிரீமியர் லீக்.., முதல்முறை கோப்பை வென்ற திருப்பூர் அணி.!

சென்னை : தமிழ்நாடு பிரீமியர் லீக் (TNPL) 2025 தொடரை சாய் கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணி வென்றது.…

4 hours ago

“பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும்” – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.!

சென்னை : தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும், ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி…

4 hours ago

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. மகளிர் உரிமைத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பம்.!

சென்னை : தமிழகத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்திற்கான விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி இன்று (ஜூலை 07,…

5 hours ago