தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3-ஆம் தேதி மதுரை வர வேண்டும் என்று மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,இதற்கு இடையில் தனிக்கட்சி குறித்து மு.க.அழகிரி ஆலோசனை மேற்கொண்டு வருவதாக செய்திகள் வெளியாகியது.ஆனால் மு.க.அழகிரி தரப்பில் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் அளிக்கப்படவில்லை.
இதனிடையே நேற்று தயாளு அம்மாளின் உடல்நிலை குறித்து அறிய கோபாலபுரம் இல்லத்திற்கு மு.க.அழகரி சென்றார்.இதன் பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,தேர்தலில் எனது பங்களிப்பு நிச்சயம் இருக்கும்.ஜனவரி 3-ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ள ஆலோசனை கூட்டத்தில் ஆதரவாளர்கள் விரும்பினால் கட்சி ஆரம்பிப்பேன். ஆலோசனைக்கு பிறகு கட்சி தொடங்குவது பற்றி முடிவு செய்யப்படும்.திமுகவில் இருந்து அழைப்பு வரவில்லை.அழைப்பு வந்தாலும் செல்ல மாட்டேன்.ரஜினி வந்தவுடன் ரஜினியை நான் சந்திப்பேன் என்று கூறினார்.இதனிடையே மு.க.அழகிரி தரப்பில் அறிக்கை ஓன்று வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையில், வருங்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன்.இந்த ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 3-ஆம் தேதி அன்று மாலை 4 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…