தமிழகம்:பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழக அரசு குறைக்காமல் இருப்பது ஏமாற்றமளிப்பதாக ம.நீ.ம.துணைத்தலைவர் தங்கவேலு தெரிவித்துள்ளார்.
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை, தமிழக அரசு குறைக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் தங்கவேலு வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் கூறியிருப்பதாவது:
“பெட்ரோல் மற்றும் டீசல் விலையேற்றத்தில், மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் கலால் வரி பிரதான பங்கு வகிக்கிறது. தீபாவளி அன்று பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.5 என்ற அளவிலும், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.10 என்ற அளவிலும் மத்திய அரசு குறைத்தது. இதனை தொடர்ந்து 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான வாட் வரியும் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்காமல் இருப்பது ஏமாற்றமளிக்கிறது.
தி.மு.க தேர்தல் வாக்குறுதியாக ‘பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 5, டீசலின் விலை லிட்டருக்கு ரூ 4 குறைக்கப்படும்’ என்று அறிவித்திருந்தது. அதன்படி பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ 3 குறைக்கப்பட்டது என்றாலும், எரிபொருள் விலையின் கிடுகிடு ஏற்றம் தமிழக மக்களுக்கு தாங்கவியலாத கடும் சுமையாகவே இருக்கிறது.
பல மாநிலங்கள் மதிப்புக் கூட்டு வரியைக் குறைத்திருக்கின்றன. கர்நாடகாவில் மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டதன் விளைவாக பெட்ரோல், டீசல் விலை ரூ.7 குறைந்து பெட்ரோல் ரூ.100.14க்கும் டீசல் ரூ 84.60க்கும் விற்பனையாகின்றன. புதுச்சேரியில் பெட்ரோலின் விலை 12 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.94க்கும், டீசலின் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ 84.60க்கும் விற்கப்படுகின்றன.
ஆனால் தமிழகத்திலோ, பெட்ரோல் ரூ 101.40 க்கும் டீசல் ரூ.91.43க்கும் விற்பனையாகின்றன. எண்ணெய் அமைச்சகத்தின் பெட்ரோலியத் திட்டமிடல் மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள, 1.10.2021 தேதியிட்ட தரவுப்படி, தமிழ்நாட்டில் வாட் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 13% + ரூ. 11.52, ஒரு லிட்டர் டீசலுக்கு 11% + ரூ.9.62 வரி விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி 20.87 ரூபாய் பெட்ரோலுக்கும், 17.52 ரூபாய் டீசலுக்கும் வரி வசூலிக்கப்படுகிறது.
கர்நாடகா, புதுச்சேரி, மிசோரம், ஒடிசா, ஹரியானா, உத்ரகாண்ட், குஜாரத், திரிபுரா, சிக்கிம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடைமுறைப் படுத்தப் பட்டுள்ளது போலவே பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை தமிழகத்திலும் குறைக்க வேண்டும்.
தமிழக மக்கள் ஏற்கெனவே கொரோனா பெருந்தொற்று, வருவாய் இழப்பு, விலைவாசி உயர்வு, வெள்ளச் சேதங்கள் எனத் தவித்துவருகிறார்கள். மக்களின் அன்றாட வாழ்க்கையை மேலும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…