பெண் காவலரை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்த ரக்ஷாபந்த சகோதரர் முதல்வர் மு.க ஸ்டாலின் என்று அமைச்சர் சேகர் பாபு பேரவையில் புகழாரம்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறையில் முதன்முறையாக 110 புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசிய அமைச்சர் சேகர் பாபு, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பெரியாரின் கனவு. அதை அண்ணா நிறைவேற்ற முயற்சித்தார், கலைஞர் சட்டமாக்கினார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி நவீன ராமானுஜராக திகழ்கிறார் என புகழாரம் சூட்டினார்.
பெண் காவலரை பாதுகாப்பு பணியில் இருந்து விடுவித்த ரக்ஷாபந்த சகோதரர் முதல்வர் என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின், 641 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், இந்தாண்டு இறுதிக்குள் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான இந்து சமய அறநிலைய துறைக்கு சொந்தமான சொத்துகளை மீட்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், திருச்செந்தூர், திருத்தணி, சமயபுரம் கோவிலில் முழு நேர அன்னதான திட்டம் செப் 17ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் தைத்திங்கள் முதல் நாள் அர்ச்சகர்கள் பூசாரிகள் பணியாளர்களுக்கு புத்தாடை வழங்கப்படும் எனவும் தெரிவித்த அமைச்சர், மத்திய அரசின் அறிவுறுத்தல்படியே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பாஜக உறுப்பினர் பேரவையில் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார்.
மயிலாடுதுறை : நேற்று (மே 4) மயிலாடுதுறையில் திமுக சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்.பி…
சென்னை : நேற்று (மே 4) இந்தியா முழுவதும் நீட் (NEET) நுழைவுத்தேர்வு நடைபெற்றது. இது இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…