தமிழகம் முன்னேற வேண்டுமென்றால், நரேந்திர மோடி, பழனிசாமி என்ற டபுள் எஞ்சின் தேவை.
பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி கோயம்புத்தூர் ராம்நகர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்காக தினமும் பொய்களை கூறி வருகிறார் என்றும், இந்துக்களை மட்டும் இழிவுபடுத்த ஸ்டாலின், ஆத்திகரா? அல்லது நாத்திகரா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கடவுள் இல்லை என்று சொல்லும் ஸ்டாலின், அனைத்து இடங்களிலும் வேலொடு சென்று, வேல் விவகாரத்தில் நாடகமாடி வருகிறார் என்றும், திமுகவின் ஆட்சி காலத்தில் மின்வெட்டு, வேலை இழப்பு போன்றவை இருந்தது என்றும், காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்டது தான், நீட்தேர்வு, ஜல்லிக்கட்டு என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தமிழகம் முன்னேற வேண்டுமென்றால், நரேந்திர மோடி, பழனிசாமி என்ற டபுள் எஞ்சின் தேவை என்றும், முதலமைச்சர் தாயார் குறித்து ஆ.ராசா அவதராக பேசிய கண்டனத்திற்குரியது என்றும், இதுபோன்று பேசுவது திமுகவின் டிஎன்ஏ என்று விமர்சித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…