பொதுச்செயலாளர் பதவியில் இருந்து என்னை நீக்கியது செல்லாது – சசிகலா

VK SASIKALA

அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி விகே சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது. அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதை எதிர்த்து விகே சசிகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

அப்போது, அதிமுகவின் மூத்த தலைவர்களாக இருந்த மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி போன்றவர்களால் முன்மொழியப்பட்டும் வழிமொழியப்பட்டும் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக பதவி வகித்து வந்த சசிகலாவை நீக்கியது செல்லாது, அதற்கு அதிகாரமில்லை என சசிகலா தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதன் மூலம் அடிப்படை அமைப்பு மாற்றப்பட்டுள்ளது. எம்.ஜி.ஆர் உருவாக்கிய விதிகளுக்கு புறம்பாக கட்சிகளின் விதிகள் இஷ்டம்போல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின்போது நீதிபதிகள் முன்வைத்த கேள்விகளுக்கும், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் பதிவில் கூறினார். இந்த வழக்கின் மீதான வாதங்கள் இன்னும் நிறைவடையாததால் விசாரணை இன்றும் தொடர உள்ளதாக கூறப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் பொதுக்குழு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திமுக வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை தேவை! இல்லையெனில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – இபிஎஸ்

இதையடுத்து, சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்து,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன. இதன்பின், ஜெயலலிதா மறைவிற்கு ஒன்றை தலைமை பிரச்சனையால் ஓபிஎஸ், இபிஎஸ் என இரு அணிகளாக பிளவுபட்டது. கடந்த ஆண்டு ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

இதனிடையே, தன்னை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இதனை எதிர்த்து சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தற்போது, நீதிபதி சுப்பிரமணியன், செந்தில் குமார் அமர்வு முன்பு விசாரணை நடந்து வருகிறது. அப்போது, இரு தரப்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. தன்னை நீக்கியது செல்லாது சசிக தரப்பில்  கூறிய நிலையில், இன்றும் விசாரணை நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 21012025
Thiruvalluvar - TN CM MK Stalin
donald trump dance
Instagram Reels
mythri movie makers naveen
US President Donald Trump
virat kohli BCCI