நா ரெடி..தஞ்சை போலீஸ் அதிரடி..! லியோ பாடலை வைத்து வித்தியாசமான விழிப்புணர்வு..!

விஜய்-ன் லியோ பாடலை வைத்து தஞ்சை போலீஸ் வித்தியாசமான விழிப்புணர்வு போஸ்டரை வெளியிட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் தயாராகிக்கொண்டிருக்கும் லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்நிலையில், நேற்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது.
பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதை தொடர்ந்து, மாலை 6.30 மணியளவில் ‘நா ரெடி’ பாடல் வெளியாகி சமூக வலைத்தளங்களில் தற்பொழுது வரை டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த நா ரெடி பாடலை வைத்து தஞ்சை போலீஸ், போதைப்பொருளுக்கு எதிராக வித்தியாசமான முறையில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறது.
இது தொடர்பாக தஞ்சை போலீஸ் வெளியிட்டுள்ள போஸ்டரில், “நா ரெடிதான் வரவா..போலீஸ் நா கிளம்பி வரவா..என்ற வாசங்களுடன், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விற்பனை குறித்த புகாரை 9042839147” என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளுமாறு தெரிவித்துள்ளது. மேலும், விஜய் நடிக்கும் இந்த லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Enna nanba?
Thagaval kuduka neenga ready ah?#notodrugs#driveagainstdrugs#yestolife #tnpolice #thanjavurpolice #NaaReady #readytoserve pic.twitter.com/arxFscPv8D— Thanjavur District Police (@ThanjavurPolice) June 23, 2023