நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையத்தில் வசித்து வந்தவர் வெங்கடேசன். இவர் மதுவிற்கு அடிமையாகி தினமும் மது குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். இவரது மனைவி பெயர் செல்வி. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். வீட்டில் தினமும் குடித்துவிட்டு தொல்லை செய்வதை செல்வி, தனது நண்பரான பெருமாளிடம் கூறியுள்ளார்.
பெருமாளும் அதே குமரபாளையத்தை சேர்ந்தவர் தான். சம்பவத்தன்று பெருமாள், வெங்கடேசனை கூட்டிக்கொண்டு காவிரி நகருக்கு சென்று வெங்கடேசனுக்கு அதிகமாக மது வாங்கிக்கொடுத்து உள்ளார். வெங்கடேசனுக்கு அதிகமாக போதை ஏறியதை தொடர்ந்து, அவரை பெருமாள், காவிரி ஆற்று பாலத்தில் இருந்து ஆற்றிற்குள் தள்ளிவிட்டுதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை சம்பவம் பெருமாள், செல்வி தவிர வெளியில் யாருக்கும் தெரியவில்லை என தெரிகிறது. இதன் பின்னர்தான் பெருமாள் தன் கோர முகத்தை காட்டியுள்ளான். இந்த கொலை சம்பவத்தை வெளியில் சொல்லிவிடுவதாக மிரட்டி செல்வியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை பொறுத்துக்கொள்ளமுடியாத செல்வி, போலீசில் நடந்தது அத்தனையும் கூறி, சரணடைந்துள்ளார்.
தகவலறிந்த பெருமாள் போலீசில் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். இறந்ததாக கூறப்பட்ட வெங்கடேசனின் உடல் இன்னும் கிடைக்கவில்லை. காவிரி ஆற்றில் உடலை தேடும் பணி நடந்து வருகிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…