நீட் தேர்வு நடுநிலையான தேர்வு இல்லை என்பதை ராஜன் குழு அளித்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் தலைமையிலான குழு, ஆய்வறிக்கையை சமர்பித்தது.
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வுக்கு எதிராக இன்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தாக்கல் செய்யப்படவுள்ள சட்டமசோதாவில், நீட் தேர்வு நடுநிலையான தேர்வு இல்லை என்பதை ராஜன் குழு அளித்த அறிக்கையில் தெளிவாக கூறப்பட்டுள்ளது தெளிவாகிறது. கடந்த 4 ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் சமூக மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நம்பிக்கையை தகர்த்துள்ளது. நீட், சிறப்பு பயிற்சி பெறக்கூடிய, சமூகத்தின் பொருளாதார அதிக சலுகை பெறக்கூடிய வகுப்பினரை தான் ஆதரிக்கிறது.
மேலும், சமூக நீதியை உறுதி செய்யவும், சமத்துவம் மற்றும் சமவாய்ப்பை நிலைநிறுத்தவும், கட்டாயமாக எதிர்கொள்ளும் கூடுதல் தேர்வால் சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு சுமை அதிகரிப்பதாகவும் இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ள நிலையில், முழுவதுமாக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜன் குழுவின் பரிந்துரையை ஏற்று தான் இந்த சட்ட கொண்டுவரப்படவுள்ளது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…