Tamilnadu Minister Duraimurugan [F
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
இதனை தொடர்ந்து, காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழ்நாடுக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிட ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் அதிமுக, பாமக ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் அவர்கள் முல்லைப் பெரியாறு பிரச்சினையை குறிப்பிட்டு சட்டப்பேரவையில் பதில் அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், கேரளாவை விட விடாக்கண்டன், கொடாக்கண்டனாக இருப்பது கர்நாடகா. காவேரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு மதிக்காத போக்கு நிலவுகிறது.
கர்நாடகாவிடம் நாங்கள் யாசகம் கேட்கவில்லை. நீரை தான் கேட்கிறோம். மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது நமது உரிமையை அடகு வைப்பதாகிவிடும். கர்நாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்துவது தற்கொலைக்கு சமமானது. கர்நாடகாவிடம் ஒரு கை அளவு நீர் இருந்தாலும் அதில் தமிழகத்தின் பங்கு உண்டு. கர்நாடக அணையில் தண்ணீர் இருப்பதால் தான் நான் கேட்கிறோம் என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…