பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சரையும் ஒருமையில் பேசிய விவகாரம்! நெல்லை கண்ணன் அதிரடி கைது!

Published by
மணிகண்டன்
  • ஞாயிற்று கிழமை நடந்த போராட்டத்தில் நெல்லை கண்ணன் பேசுகையில் பிரதமரையும், உள்துறை அமைச்சரையும் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
  • இதன் காரணமாக நேற்று இரவு பெரம்பலூயில் உள்ள ஒரு தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டார்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பாக திருநெல்வேலியில் கடந்த ஞாயிற்று கிழமை போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டத்தின்போது பேச்சாளரும் எழுத்தாளருமான நெல்லை கண்ணன் பேசும்போது, பிரதமர் மோடியையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. மேலும், உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் பற்றியும் கருத்துக்களை இவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர் பேசிய காணொளி இணையத்தில் வைரலாக பரவி வந்தது.

இந்நிலையில் பிரதமர் மோடியையும், அமித்ஷாவை ஒருமையில் பேசியதாக கூறப்பட்ட நெல்லை கண்ணன் கைது செய்யபட வேண்டும் என பாஜக சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய போலீசார் விரைந்தனர். ஆனால், அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என ஒரு திருநெல்வேலியில் இருந்து மதுரை தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் சென்றார்.

பின்னர், அங்கிருந்து  பெரம்பலூர் தனியார் விடுதியில் நெல்லை கண்ணன் சென்று அங்கு தங்கியிருந்தார். பாஜகவினரின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து போலீசார் அவரை பெரம்பலூர் தனியார் விடுதியில் நேற்று இரவு கைது செய்தனர்.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

டூரிஸ்ட் ஃபேமிலி பெரிய ஹிட்…சம்பளத்தை உயர்த்துவீங்களா? சசிகுமார் சொன்ன பதில்!

சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…

1 hour ago

அந்த SIR-ஐ காப்பாற்றத் துடிக்கும் நீங்கள் தான் வெட்கித் தலைகுனிய வேண்டும்! இபிஎஸ் பதிலடி!

சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…

2 hours ago

தீவிரவாதிகளை தான் டார்கெட் பண்ணோம்..பாகிஸ்தானை இல்லை..பிரதமர் மோடி ஸ்பீச்!

பஞ்சாப் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…

2 hours ago

மீண்டும் தொடங்கும் ஐபிஎல்…பஞ்சாப் அணிக்கு வந்த பெரிய சிக்கல்கள்?

பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…

3 hours ago

பொள்ளாச்சி தீர்ப்பு: ‘சார்’கள் மானமிருந்தால் வெட்கித் தலைகுனியட்டும்…முதல்வர் ஸ்டாலின் பதிவு!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…

3 hours ago

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு! வரவேற்று அறிக்கை வெளியிட்ட தவெக தலைவர் விஜய்!

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…

5 hours ago