நில பிரச்சனையால் காட்டுக்குள் கூட்டிச்சென்று மாமனார் தலையில் கல்லை போட்டு கொன்ற மருமகன்கள்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லிமலை தின்னூர்நாடு எனும் பகுதியில் உள்ள கண்ணி பட்டியை சேர்ந்த 45 வயதான சாமிதுரை என்பவருக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களில்இவருக்கு திருமணமாகி உள்ளது. இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி தேவனூர் வனப்பகுதியில் முகம் சிதைந்த நிலையில் சாமிதுரை அவர்கள் சடலமாக கண்டெடுக்கப்பட்டார், இதைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்த பொழுது சாமிதுரை மருமகன் ராஜ்குமார் மற்றும் பிரசாத் ஆகிய இருவரும் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் சில மாதங்களுக்கு முன் தர்மலிங்கம் என்பவருக்கு சொந்தமான நிலத்தை ராஜ்குமார் முன்னின்று மாமனாருக்கு மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை பேசி எடுத்து கொடுத்ததாகவும், தட வழி பிரச்சனை இருந்ததால் குத்தகை எடுத்த நிலத்தில் சிக்கல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் விவசாயம் செய்ய முடியாததால் ராஜ்குமார் குத்தகை தொகையை திரும்பப் பெற்றுக் கொடுத்துள்ளார். ஆனால் குத்தகை ஒப்பந்தம் தராமல் சாமிதுரை நாட்களை கடத்தியதால் மாமனாருக்கும் மருமகனுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சமிதுரை தனக்கு சொந்தமான நிலத்தை 20 லட்சத்திற்கு விற்று மூன்று மகளுக்கும் சாமிதுரை பிரித்து கொடுக்காமல் வைத்துக் கொண்டே இருந்துள்ளார். இதனால் மாமனார் மீது கோபத்தில் இருந்த ராஜ்குமார் மற்றும் மற்றொரு மருமகன் பிரசாத் ஆகிய இருவரும் சேர்ந்து மாமனாரை கொலை செய்ய திட்டமிட்டு தங்களது நண்பர்கள் கார்த்திக் மற்றும் பழனியப்பன் முருகேசன், விஜயகுமார், சகாதேவன் உள்ளிட்ட ஏழு பேர் சேர்ந்து நிலம் ஒன்று விற்பனைக்கு வருவதாக கூறி அவரை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு மது அருந்துவிட்டு அனைவரும் சேர்ந்து சாமி துறையின் தலையில் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சாமிதுரையின் மருமகன் ராஜ்குமார், பிரசாத் மற்றும் அவருடைய நண்பர்கள் 5 பேரை கைது செய்துள்ளனர் .தலைமறைவாகியுள்ள இருவரை தேடி வருகின்றனர்.
வாஷிங்டன் : எலான் மஸ்க்கின் xAI நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Grok என்ற செயற்கை நுண்ணறிவு (AI) சாட்பாட், X தளத்தில்…
லண்டன் : இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது விறு விறுப்பாக…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சென்னையில் பேசுகையில் " எடப்பாடி பழனிசாமி ‘தமிழகத்தை மீட்போம்’ என்று ஒரு பயணத்தைத்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானின் மூத்த அதிகாரி ஒருவர் தனக்கு படுகொலை மிரட்டல் விடுத்ததை உறுதிப்படுத்தி, அதைப்…
திருப்பதி : ஆந்திர மாநிலத்தின் முன்னாள் அமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினருமான ரோஜா, நடிகர் விஜய்யின் அரசியல்…
லண்டன் : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் துணைக் கேப்டனும்,…